SLS சான்றிதழ் இல்லாத தலைக்கவசங்களுக்கு தடை !

எஸ்.எல்.எஸ். தரச்சான்றிதழ் இல்லாத தரங்குறைந்த பாதுகாப்பு தலைக் கவசம் (ஹெல்மட்) பாவனை தடை செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் போக்குவரத்து தலைமையகம் தெரிவித்துள்ளது.
எனவே புதிதாக தலைக்கவசம் கொள்வனவு செய்யும் போது தரச் சான்றிதழ் தொடர்பாக கவனமெடுக்குமாறு பொலிஸ் போக்கு வரத்து தலைமையகம் பொது மக்களை கேட்டுக் கொண்டுள்ளது. மோட்டார் சைக்கிள் சாரதியின் பாதுகாப்புத் தலைக்கவசத்தில் “வைஸர் “இருக்க வேண்டியது கட்டாயமென பொலிஸ் போக்குவரத்து தலைமையக உபபொலிஸ் பரிசோதகர் சேனக கமகே தெரிவித்துள்ளார். தற்போது மோட்டார் சைக்கிள் விபத்துக்கள் அதிகரித்து காணப்படுவதாகவும் தரமான தலைக்கவசம் அணிவதன் மூலம் தலையை பாதுகாத்து கொள்ள முடியுமெனவும் அவர் கூறினார்.
பாதை விதிகளை மீறி நடப்பதாலேயே விபத்துக்கள் ஏற்படுவதாக கூறிய அவர் பாதுகாப்பு தலைகவசத்தை பாவிக்கும் போது கவசம் தலையுடன் இறுக்கமாக பொருந்தி இருக்க வேண்டுமென்றும் தெரிவித்தார்.அவ்வாறில்லாவிட்டால் காதுகளை பாதிக்கும் அபாயம் ஏற்படுமெனவும் அவர் எச்சரித்தார். அதேபோல் மோட்டார் சைக்கிளை ஓட்டும் போது கைத்தொலைபேசியை தலைக்கவசத்துக்கும் காதுக்கும் இடையே வைத்து பேசிக் கொண்டு மோட்டார் சைக்கிள் செலுத்துவதை தவிர்க்குமாறு அவர் கேட்டுக் கொண்டார்.
Related posts:
|
|