QR குறியீட்டுடன் புதிய சாரதி அனுமதி அட்டை – புள்ளிகளை குறைக்கவும் நடவடிக்கை – ஆணையாளர் நாயகம் தெரிவிப்பு!

Thursday, November 2nd, 2023

தற்போதுள்ள குறைக்கடத்திக்கு (semiconductor) பதிலாக QR குறியீடுகளுடன் சாரதி அனுமதி அட்டையை வழங்கும் திட்டத்தை மோட்டார் போக்குவரத்துத் திணைக்களம் தொடங்கியுள்ளது.

அமைச்சரவை அனுமதி கிடைத்ததை அடுத்து இந்த திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளதாக அத்திணைக்களத்தின் ஆணையாளர் நாயகம் நிஷாந்த அனுருத்த வீரசிங்க கூறியுள்ளார்.

ஒக்டோபர் 16 ஆம் திகதி இராணுவம் சாரதி அனுமதி அட்டைகளை அச்சிடுதல் மற்றும் வழங்கும் நடவடிக்கையை தம்மிடம் ஒப்படைத்ததாகவும் தெரிவித்துள்ளார்.

QR குறியீடுகளுக்கான தனி செயலி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது என்றும் இது போட்டார் மற்றும் பொலிஸ் திணைக்களங்களினால் மட்டுமே பயன்படுத்தப்படும் என்றும் நிஷாந்த அனுருத்த வீரசிங்க கூறியுள்ளார்.

மேலும் போக்குவரத்து சம்பந்தப்பட்ட குற்றங்களுக்கான டிமெரிட் புள்ளிகள் முறையும் ஸ்மார்ட் சாரதி அனுமதி அட்டையில் உள்ளடக்கப்பட்டுள்ளதாக வீரசிங்க மேலும் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது

000

Related posts: