Online Visa வசதிகளை விரிவுபடுத்த நடவடிக்கை – குடிவரவு குடியகல்வு கட்டுப்பாட்டாளர் நாயகம்!
Saturday, December 23rd, 2017
கட்டுநாயக்க சர்வதேச விமானநிலையத்தில் நாளாந்தம் சுமார் 15ஆயிரம் பேர் குடிவரவு குடியகல்வு விடயங்களுடன் தொடர்புபடுவதாக குடிவரவு குடியகல்வு கட்டுப்பாட்டாளர் நாயகம் எம் என் ரணசிங்க தெரிவித்தார்.
இந்த பணிகளை விரிவுபடுத்துவதற்காக கூடுதலான அதிகாரிகளை ஈடுபடுத்துவதற்கும் பயணிகளின் வசதிகருதி தேவையான குடிவரவு குடியகழ்வு வசதிகளை செய்துகொடுப்பதற்காக நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
இதற்கான ஒழுங்குகள் தற்பொழுது விமானநிலையத்தில் உள்ள எமது பிரிவில் மேற்கொள்ளப்பட்டு வருவதாக குடிவரவு குடியகல்வு கட்டுப்பாட்டாளர் நாயகம் தெரிவித்தார்.
இதேபோன்று வெளிநாடுகளிலிருந்து வரும் பயணிகளுக்கு விமானநிலையத்திலேயே விசா அனுமதியினை வழங்குவதற்காக அதாவது இணையத்தள விசா (online Visa) வசதிகளை வழங்குவதற்கு நடவடிக்கைகள் விரிவுபடுத்தப்பட்டுள்ளன
Related posts:
பொதுநலனைக் கருத்தில் கொண்டு யாழ். மதபோதனையில் கலந்து கொண்டவர்களுக்கு அறிவுறுத்தல்!
வெள்ளை சீனிக்கு நிர்ணயிக்கப்பட்டிருந்த அதிகூடிய உச்ச விலை தொடர்பான வர்த்தமானி இரத்து!
இலங்கையில் பரவும் கொரோனா பிரித்தானியாவில் அடையாளம் காணப்பட்ட புதிய வகை வைரஸ் என உறுதி!
|
|