O/L பரீட்சையில் இம்முறை 688,573 பேர் தோற்றுவர்!

இவ்வருடம் நடைபெறவுள்ள கல்விப்பொதுத் தராதர சாதாரண தர பரீட்சைக்கு நாடு பூராகவுமிருந்து மொத்தமாக 688,573 பேர் தோற்றவுள்ளனர்.
பாடசாலை பரீட்சார்த்திகளாக 429,493 பேரும் தனிப்பட்ட பரீட்சார்த்திகளாக 259,080 பேரும் தோற்றவுள்ளதாக பரீட்சைகள் ஆணையாளர் தெரிவித்துள்ளார். அத்துடன் மேற்படி பரீட்சை 5116 நிலையங்களில் இடம்பெறவுள்ளது.
3762 நிலையங்களில் புதிய பாடத்திட்ட அடிப்படையிலான பரீட்சையும் 1354 நிலையங்களில் பழைய முறையிலான பரீட்சையும் இடம்பெறவுள்ளது. மேலும் புதிய பாடத்திட்ட இணைப்பு நிலையங்களாக 536 உம் பழைய பாடத்திட்ட நிலையங்களாக 487 உம் செயற்படவுள்ளதாக பரீட்சைகள் ஆணையாளர் பி.ஜனத்பூஜித தெரிவித்துள்ளார்.
Related posts:
புலம்பெயர்ந்தவர்களால் பில்லியன்களை வருமானமாக பெறும் இலங்கை!
மாணவர்களுக்கான போக்குவரத்தை ஒழுங்குபடுத்துவதற்கு குழு நியமனம்!
எதிர்வரும் 26 ஆம் 27 ஆம் திகதிகளில் தொழிற்சங்க போராட்டம்...!
|
|