O/L பெறுபேற்று வீதத்தை அதிகரிக்க விசேட திட்டம் – கல்வி அமைச்சின் செயலாளர் சத்தியசீலன் !
Friday, April 19th, 2019இந்த வருடம் (2019) இடம் பெறும் க.பொ.த சாதாரண தரப்பரீட்சையில் வடமாகாணத்தில் 75 வீதமான சித்தி அதிகரிப்பைபெற மே மாதம்முதல் பல்வேறு திட்டங்கள் அறிமுகப்படுத்தப்படவுள்ளதாக வடமாகாண கல்வி அமைச்சின் செயலாளர் எஸ். சத்தியசீலன் தெரிவித்துள்ளார்.
வட மாகாணத்தில் உள்ள அனைத்து மாவட்டங்களையும் உள்ளடக்கியதாக 12 வலயங்களிலும் இத்திட்டங்கள் நடைமுறைப்படுத்தப்படவுள்ளன.
க.பொ.த சாதாதரண தரப்பரீட்சையில் கடந்த மூன்று வருடங்கள் பெற்ற அதிகரிப்பு முறையே (2016) 60 வீதமாகவும் (2017) 66 வீதமாகவும் (2018) 70 வீதமாகவும் உள்ளன.
இந்நிலையில் 2019 இல்75 வீதமாக அதிகரிப்பை எட்டும் நோக்கில் தரம் 10 மூன்றாம் தவணை மற்றும் தரம் 11 முதலாம் தவணைகளில் பாடரீதியாகப் பெற்ற புள்ளிகளின் அடிப்படையில் மாணவர்களுக்கு பயிற்சி வகுப்புக்களும் செயன்முறை விளக்கங்களும் வளங்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்தார்.
இத்திட்டத்தை சிறந்த முறையில் முன்னெடுத்துச் செல்வதற்குப் பன்னிரண்டு வலயப் பணிப்பாளருக்கும் அறிவுறுத்தல் வளங்கப்பட்டுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.
Related posts:
|
|