M.V. எக்ஸ் பிரஸ் பேர்ள் கப்பலில் இருந்து எண்ணெய்க் கசியவில்லை – கடல்சார் பாதுகாப்பு அதிகார சபை உறுதி!

Monday, June 14th, 2021

தீப்பற்றி எரிந்த M.V. எக்ஸ் பிரஸ் பேர்ள் கப்பலில் இருந்து எண்ணெய்க் கசிவு எதுவும் ஏற்படவில்லை என்று கடல்சார் பாதுகாப்பு அதிகார சபை உறுதிப்படுத்தியுள்ளது.

அண்மையில் இலங்கை கடற்பரப்பில் விபத்திற்குள்ளனா கப்பலில் இருந்து எண்ணெய்க் கசிவு ஏற்படுவதாக சில ஊடகங்களில் செய்திகள் வெளியாகியிருந்தன.

எனினும், ஆராய்வு நடத்தப்பட்டதில் அவ்வாறு எவ்வித பாரியளவிலான எண்ணெய்க் கசிவுகளும் இல்லை என்று உறுதிசெய்யப்பட்டுள்ளதாக குறித்த அதிகார சபை தெரிவித்துள்ளது.

எனினும், கப்பல் ஒன்று பயணிக்கும் போது ஏற்படும் எண்ணெய்ப் படிமம் அல்லது விபத்து ஏற்பட்டதால் ஏற்பட்ட மிகச் சிறிய அளவிலான எண்ணெய்த் தடத்தை அவதானிக்க முடிந்ததாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

எவ்வாறாயினும், பாரியளவிலான ஆபத்தை ஏற்படுத்தும் எண்ணெய்க் கசிவு ஏற்படவில்லை என்று குறித்த அதிகார சபை தெரித்துள்ளது. ஆய்வுப் பணிகளின் போது எடுக்கப்பட்ட புகைப்படங்களையும் குறித்த அதிகார சபை வெளியிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts: