IMF இன் முகாமைத்துவ பணிப்பாளராக மீண்டும் தெரிவானார் கிறிஸ்டலினா ஜார்ஜீவா!
Saturday, April 13th, 2024சர்வதேச நாணய நிதியத்தின் (IMF) முகாமைத்துவ பணிப்பாளராக பணியாற்ற கிறிஸ்டலினா ஜார்ஜீவா இரண்டாவது முறையாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.
செயற்குழுவின் ஏகோபித்த முடிவின்படி, 2024 ஆம் ஆண்டு ஒக்டோபர் 1 ஆம் திகதி முதல் இரண்டாவது ஐந்தாண்டு காலத்திற்கு நேற்று (12) அவர் தெரிவு செய்யப்பட்டார்.
அந்த பதவிக்கு பரிந்துரைக்கப்பட்ட ஒரே வேட்பாளர் இவர் எனவும், இந்த நியமனத்தை வழங்குவதற்கு முன்னர் அவருடன் பல சுற்று பேச்சுவார்த்தைகள் நடத்தப்பட்டதாகவும் சர்வதேச நாணய நிதியத்தின் உத்தியோகபூர்வ இணையத்தளத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.
அவரது வலுவான மற்றும் சுறுசுறுப்பான தலைமை IMF செயற்குழுவினால் பாராட்டப்பட்டுள்ளது.
பல்கேரிய நாட்டைச் சேர்ந்த ஜார்ஜீவா, 2019 ஒக்டோபர் மாதம் முதலாம் திகதி முதல் IMF இன் முகாமைத்துவ பணிப்பாளராக இருந்து வருகிறார்.
அதற்கு முன், அவர் ஜனவரி 2017 முதல் உலக வங்கியின் தலைமை நிர்வாக அதிகாரியாகவும் பணியாற்றினார் என்பது குறிப்பிடத்தக்கது.
000
Related posts:
|
|