GST வருமானம் 91,916 கோடி!

கடந்த செப்டம்பர் மாதம் சரக்கு மற்றும் சேவை வரி (ஜி.எஸ்.டி.) வருவாய் 91,916 கோடி ரூபாயாக உள்ளது.
இதுதான் இந்த நிதி ஆண்டின் மிக குறைந்த ஜி.எஸ்.டி. வருவாய் ஆகும். ஆகஸ்ட் மாதத்தில் ஜி.எஸ்.டி. வருவாய் 98,202 கோடியாக இருந்தது. கடந்த ஆண்டு செப்டம்பர் மாத ஜி.எஸ்.டி. வருவாயுடன் ஒப்பிடும் போது இந்த ஆண்டு 2.67 சதவீதம் குறைந்துள்ளது.
மொத்த ஜி.எஸ்.டி. வருவாயில் மத்திய ஜி.எஸ்.டி. 16,630 கோடி, மாநில ஜி.எஸ்.டி. 22,598 கோடி, ஒருங்கிணைந்த ஜி.எஸ்.டி. 45,069 கோடி, இறக்குமதி மீதான கூடுதல் வரி 7,620 கோடி என மத்திய நிதி அமைச்சகம் வெளியிட்டுள்ள தகவலில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Related posts:
வாக்காளர் அட்டை கிடைக்காதவர்களும் வாக்களிக்கலாம்!
பழைய முறையில் மாகாண சபைத் தேர்தலை நடத்த இணக்கம்?
முன்னாள் போராளிகளுக்காக மாதாந்தக் கொடுப்பனவில் 2000 ரூபா ஒதுக்க வேண்டும் - ஈபிடிபியின் மாநகரசபை உறு...
|
|