GSP வரிச்சலுகையை பாதுகாக்க அரசாங்கம் முக்கிய நடவடிக்கை – மனித உரிமை மேம்பாடு குறித்து அதிக கவனம் என அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவிப்பு!

ஜி.எஸ்.பி வரிச் சலுகையை பாதுகாத்துக்கொள்ளும் வகையில் அரசாங்கம் மனித உரிமை மேம்பாடு தொடர்பான செயற்பாடுகளை அதிகரிப்பதற்கு தேவையான நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளதாக அமைச்சரவைப் பேச்சாளர் அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார்.
நேற்றையதினம் தகவல் திணைக்களத்தில் நடைபெற்ற அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் செய்தியாளர் மாநாட்டின் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
ஊடகவியலாளர் ஒருவர் அதுதொடர்பில் கேள்வியொன்றை எழுப்பினார். அதன்போது ஜி.எஸ்.பி வரிச்சலுகை எதிர்காலத்தில் எமக்குக் கிடைக்குமா? அது தொடர்பில் அரசாங்கம் மேற்கொண்டுளள நடவடிக்கை என்ன? என அவர் கேள்வியெழுப்பியுள்ளார்.
அதற்கு பதிலளித்த அமைச்சர், ஜிஎஸ்பி வரிச் சலுகையை பெற்றுக்கொள்வது தொடர்பில் பேச்சுவார்த்தைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
அது இடைநிறுத்தப்பட்டால் தொடர்ந்து முன்னெடுக்கப்படுவதற்காக இலங்கை அரசாங்கம் மனித உரிமை செயற்பாடுகளை மேம்படுத்தும் வகையில் தேவையான நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளதாகவும் அமைச்சர் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
000
Related posts:
|
|