BC படிவத்தை கிராம சேவகரிடம் ஒப்படைக்குமாறு வேண்டுகோள்!

Wednesday, June 13th, 2018

வாக்காளர் பட்டியலை உறுதி செய்வதற்கான தேருநர் இடாப்பு மீளாய்வு படிவத்தை சரியான முறையில் பூர்த்தி செய்து அவசரமாக கிராம சேவகரிடம் ஒப்படைக்குமாறு தேர்தல் செயலகம் வேண்டுகோள் விடுத்துள்ளது.

தேர்தல் பதிவேடுகளுடன் தொடர்புடைய இந்த படிவத்தை வீட்டுக்கு வீடு வழங்கும் நடவடிக்கைகள் தற்போது மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

அதனடிப்படையில் 90 வீதமான படிவங்கள் பகிர்ந்தளிக்கப்பட்டுள்ளதாகவும் அவற்றை சரியான முறையில் பூர்த்தி செய்து கிராம சேவகரிடம் ஒப்படைக்குமாறும் தேர்தல் செயலகம் வேண்டுகோள் விடுத்துள்ளது.

சிலர் இறுதித்தருணம் வரையில் குறித்த தேருநர் இடாப்பு மீளாய்வு படிவத்தை ஒப்படைக்காததால் பல்வேறு சிக்கல்கள் ஏற்படுவதாக தேர்தல்கள் தலைமையகம் தெரிவித்துள்ளது.

எதிர்காலத்தில் பல்வேறு தேர்தல்கள் நடைபெற இருப்பதால் அவற்றிற்கு குறித்த வாக்காளர் பட்டியலே கருத்திற்கொள்ளப்படும் என தேர்தல் தலைமையகம் மேலும் தெரிவித்துள்ளது.


பாராளுமன்றத்தில் தமிழ் எம்.பிக்கள் என்ன செய்கின்றனர்? - தினக்குரல் பத்திரிகை தாயகன்
உலகில் அதிக இரத்ததானம் செய்பவர்கள் இலங்கையர்கள்!
விவசாயிகளின் எண்ணிக்கை குடாநாட்டில் வீழ்ச்சி – மாவட்டச் செயலகத்தின் புள்ளி விவரங்களில் தகவல்!
தாய் இறந்த  சில நிமிடங்களில் மகன் அதிர்ச்சியில் மரணம்!  
ஒரே தடத்தில் இரண்டு தொடருந்துகள் சாதுரியமான முயற்சியால் விபத்து தவிர்ப்பு- கோண்டாவிலில் சம்பவம்!