A9 பிரதான வீதியின் இருபுறமும் இரவிலும் பகலிலும் வாகனங்களை நிறுத்துவது தொடர்பில் வடமாகாண சிரேஷ்ட பிரதி பொலிஸ் மா அதிபர் விசேட அறிவித்தல்!
Wednesday, November 17th, 2021வடக்கு மாகாணத்தில் A9 பிரதான வீதியின் இருபுறமும் இரவிலும் பகலிலும் வாகனங்களை நிறுத்துவது தொடர்பில் வடமாகாண சிரேஷ்ட பிரதி பொலிஸ் மா அதிபர் ஜகத் பலிஹக்காரவினால் விசேட அறிவித்தல் விடுக்கப்பட்டுள்ளது.
இதன்படி, வவுனியா, கிளிநொச்சி, யாழ்ப்பாணம், முல்லைத்தீவு மற்றும் மன்னார் மாவட்டங்களில், வீதி அபிவிருத்தி அதிகாரசபையின் (RDA) உதவியுடன் பொருத்தமான வாகனத் தரிப்பிடங்களை இனங்கண்டு, இது தொடர்பில் சாரதிகளுக்கு தெளிவுபடுத்துமாறு கோரப்பட்டுள்ளது.
இப்பணியை முறையாக மேற்கொள்ள பொலிஸ் காவலர்களை பணியில் அமர்த்துமாறு பிரிவுக்கு பொறுப்பான பொலிஸ் அதிகாரிக்கு அறிவுரை வழங்கியுள்ளார்.
மேலும், வாகன சாரதிகளுக்கு இடையூறு ஏற்படாத வகையில் உரிய இடங்களில் அடையாள பலகைகளை வைக்கவும் அறிவுறுத்தினார்.
2021 ஜனவரி முதல் ஒக்டோபர் 31 வரையான காலப்பகுதியில் வட மாகாணத்தில் சுமார் 128 ஆபத்தான வீதி விபத்துக்கள் பதிவாகியுள்ளன. 134 இறப்புகள், 23 கடுமையான காயங்கள் மற்றும் 308 சிறிய காயங்கள் ஏற்பட்டுள்ளன.
வாகனங்களை ஓட்டுவதற்கு முன் சரியான மனநிலையைக் கொண்டிருக்க வேண்டும், மேலும் எப்போதும் சீட் பெல்ட்களை அணிய வேண்டும் என்றும், சரியான பாதை வேக வரம்புகளை உறுதிசெய்து, சாலை விபத்துகளைக் குறைக்கும் பாதுகாப்பு நடைமுறைகளைப் பின்பற்ற வேண்டும் என்றும் பொது மக்களிடம் வடமாகாண சிரேஷ்ட பிரதி பொலிஸ் மா அதிபர் ஜகத் பலிஹக்கார கோரிக்கை விடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
Related posts:
|
|