A/L விடைத்தாள் மதிப்பீட்டுக்கு விரிவுரையாளர்கள் தயார் – சம்மேளனம் அறிவிப்பு!

உயர்தரப் பரீட்சை விடைத்தாள் மதிப்பீட்டுப் பணிகளில் ஈடுபட தாம் தயாரென பல்கலைக்கழக விரிவுரையாளர்கள் சங்க சம்மேளனம் தெரிவித்துள்ளது.
நேற்று பிற்பகல் நடைபெற்ற விசேட கலந்துரையாடலையடுத்து, இந்தத் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.
ஜனாதிபதியுடன் பல்கலைக்கழக விரிவுரையாளர்கள் நடத்த எதிர்ப்பார்த்துள்ள கலந்துரையாடலை அடுத்த வாரம் ஒழுங்கு செய்யவுள்ளதாக ஜனாதிபதியின் தொழிற்சங்க பணிப்பாளர் நாயகம் சமன் ரத்னப்ரிய அண்மையில் தெரிவித்தார்.
இந்தநிலையில், கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சை விடைத்தாள் மதிப்பீட்டு பணிகளில் ஈடுபட தீர்மானித்துள்ளதாக பல்கலைக்கழக விரிவுரையாளர்கள் சங்க சம்மேளனம் அறிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது
Related posts:
வரி மோசடியாளர்களை முறையாகக் கண்டறிய நடவடிக்கை - நிதியமைச்சர்!
முன்னாள் ஜனாதிபதிக்கு உயர் பதவி வழங்கும் பங்களாதேஷ் !
வரட்சியான காலநிலை - மக்கள் பெரிதும் பாதிப்பு!
|
|