90 வீதத்தால் துறைமுக அதிகார சபையின் ஊழல் குறைவடைந்துள்ளது!

இலங்கை துறைமுக அதிகார சபையின் ஊழல் மோசடிகள் 90 வீதத்தால் குறைவடைந்துள்ளதாக துறைமுகங்கள் மற்றும் கப்பற்றுறை
தெரிவித்துள்ளார்.
கொழும்பு கடல்சார் கருத்தரங்கின் ஆரம்ப நிகழ்வில் கலந்துக்கொண்டு உரையாற்றுகையிலேயே பிரதி அமைச்சர் நிசாந்த முத்துஹெட்டிகம மேற்கண்டவாறு தெரிவித்தார்
அவர் மேலும் உரையாற்றுகையில்,
தற்போதைய அமைச்சர் துறைமுகத்தினுள் நிகழும் திருட்டு செயல்கள் ஊழல் மோசடிகளை 90 வீதத்தினால் குறைத்துள்ளார். அவர் திருட்டுச் செயல்களில் ஈடுப்படுவதில்லை நானும் திருட்டு செயல்களில் ஈடுப்படமாட்டேன். துறைமுகம் அரசியல்வாதிகளின் திருட்டு செயல்களின் சொர்கபுரியாக காணப்பட்ட யுகத்தை மாற்றியமைத்துள்ளோம். எங்களுடைய அமைச்சுக்கு வருகை தருபவர்களிடமிருந்து ரூபாய்களிலோ அல்லது டொலர்களிலோ பணத்தை பெற்றுக்கொள்வதற்கு நாம் தயாரில்லை. அவர்களின் தேவைகளை பூர்திச் செய்யும் பொருட்டு நாம் ஒன்றிணைந்து செயற்படுகின்றோம் என்றார்.
Related posts:
|
|