9 மாகாணங்களைச் சேர்ந்த சுகாதார சாரதிகள் பணிப்பகிஷ்கரிப்பில்!

நாடளாவிய ரீதியில் இன்று சுகாதார திணைக்களத்துடன் இணைந்த அனைத்து சாரதிகளும் பணிப்பகிஷ்கரிப்பில் ஈடுபட்டுள்ளனர்.
இந்த பணிப்பகிஷ்கரிப்பு வடமத்திய மற்றும் கிழக்கு மாகாணங்களில் சுகாதார திணைக்களத்துடன் இணைந்த சாரதிகளை வேறு திணைக்களங்களுக்கு மாற்றுவதற்குஎதிர்ப்பு தெரிவித்து முன்னெடுக்கப்பட்டுள்ளது.
வடமத்திய மற்றும் கிழக்கு மாகாணங்களைச் சேர்ந்த சுகாதார சாரதிகளே அதிகளவில் இவ்வாறு இடமாற்றப்படுவதாகவும் 9 மாகாணங்களைச் சேர்ந்த சுகாதார சாரதிகள்இன்று பணிப்பகிஷ்கரிப்பில் ஈடுபடுவதாகவும் அகில இலங்கை சுகாதார சாரதிகள் சங்கத்தின் தலைவர் பிரதீப் நிஷாந்த சுட்டிக்காட்டினார்.
இதேவேளை நாட்டில் நிலவும் அவசரகால நிலையை கருத்திற்கொண்டு, அவசர தேவைகளுக்கு உதவிபுரிய தயாராகவுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.
Related posts:
கடன் வழங்க மறுக்கும் வங்கி அதிகாரிகளுக்கு எச்சரிக்கை - நிதி அமைச்சர் !
சர்வதேச நாணய இடமிருந்து கடன் பெறுவதற்கான வேலைத்திட்டம் அடுத்த மாத நடுப்பகுதியில் அமுலாகும் – பிரதமர்...
இலங்கைக்கு தேவையான பால்மாவை இந்தியாவில் இருந்து இறக்குமதி செய்ய நவடிக்கை – விசேட குழு ஒன்றும் விரைவி...
|
|