9 இலங்கை கடற்படையினரையும் மீட்க நடவடிக்கை – பிரதியமைச்சர் ஹர்ச டி சில்வா!

Tuesday, December 6th, 2016

யெமன் மற்றும் சவுதி அரேபியா எல்லைப்பகுதியில் தடுத்து வைக்கப்பட்டுள்ள 9 இலங்கை கடற்படை வீரர்களையும் மீட்பதற்கு சகல நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக வெளிநாட்டலுவல்கள் பிரதியமைச்சர் ஹர்ச டி சில்வா தெரிவித்துள்ளார்.

பாராளுமன்றத்தில் பாராளுமன்ற உறுப்பினர் தினேஷ் குணவர்த்தன இன்று எழுப்பிய கேள்விக்கு பிரதியமைச்சர் பதில் அளித்தார்.

இவர்கள் யெமன் மற்றும் சவுதி அரேபியா எல்லைப்பகுதியில் தடுத்து வைக்கப்பட்டுள்ளார்கள். ஓமானில் உள்ள இலங்கைத்தூதரகம் டுபாயில் உள்ள கொன்சில் ஜென்ரல் ஆகியோர் துறைமுக நிறுவனத்துடன் தொடர்புகொண்டுள்ளனர். கப்பப்பணத்தை கோரவில்லை என்று தெரிவித்துள்ளனர். இது தொடர்பாக மேலும் தெரிவிக்கையில், இதில் இந்திய பிரஜை ஒருவரும் இருப்பதால் தடுத்து வைக்கப்பட்டுள்ள இலங்கையர்களை மீட்பதற்காக இந்திய அரசாங்கத்தின் ஒத்துழைப்பும் கோரப்பட்டிருப்பதாகவும் பிரதியமைச்சர் மேலும்கூறினார்.

d45f4bc9474f52c4da7286af1b2880f5_XL

Related posts: