85 வீதமான கொரோனா மரணங்கள் வேறு நோய்களால் பாதிக்கப்பட்டவர்களுக்கே நேர்ந்துள்ளன – சுகாதார மேம்பாட்டு பணியகம் தெரிவிப்பு!

Tuesday, August 31st, 2021

கடந்த ஓகஸ்ட் 13 ஆம் திகதிவரை பதிவான 85 வீதமான கொரோனா இறப்புகளில் 6 ஆயிரத்து 985 பேர் அடிப்படை நோய்களால் பாதிக்கப்பட்டவர்கள் என சுகாதார மேம்பாட்டு பணியகம் தெரிவித்துள்ளது.

சுகாதார அமைச்சின் தொற்று நோயியல் பிரிவு நடத்திய பகுப்பாய்வு மூலம் இது தெரியவந்ததாக பணியகத்தின் பணிப்பாளர் நாயகம் மருத்துவர் ரஞ்சித் படுவந்துடாவ இன்று செய்தியாளர் சந்திப்பில் தெரிவித்துள்ளார்.

குறித்த 6 ஆயிரத்து 985 மரணங்களில் 2 ஆயிரத்து 261 நபர்கள் அல்லது 53வீதமானோர் நீரிழிவு மற்றும் அதனுடன் தொடர்புடைய நோய்களால் பாதிக்கப்பட்டவர்கள் என்று தெரிவித்துள்ளார்.

2 ஆயிரத்து 202 பேர் அதாவது 52 வீதமானோர் உயர் இரத்த அழுத்தத்தால் பாதிக்கப்பட்டவர்கள். வைரஸால் பாதிக்கப்பட்ட ஆயிரத்து ஒரு பேர் அதாவது 24 வீதமானோர் ஏற்கனவே இதயம் தொடர்புடைய நோய்களைக் கொண்டிருந்தவர்கள் என்றுமு; அவர் குறிப்பிட்டுள்ளார்.

அத்துடன் உயிரிழந்தவர்களில் 800 பேர் அதாவது 18 வீதமானோர் நாட்பட்ட சிறுநீரக நோய்களால் பாதிக்கப்பட்ட அதேவேளை 445 பேர் அதாவது 10வீதமானோர் அஸ்மா நோயால் பீடிக்கப்பட்டவர்கள் எனவும் மருத்துவர் படுவந்துடாவ மேலும் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

000

Related posts: