8000 கொரோனா நோயாளர்கள் வீட்டுக்குள் – பாரிய ஆபத்துஎன கடும் எச்சரிக்கை!

Wednesday, June 2nd, 2021

பெருமளவு கொரோனா தொற்றாளர்களை வீட்டுக்குள்ளேயே தனிமைப்படுத்தி வைத்திருப்பது மிகவும் ஆபத்தானது என அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் எச்சரிக்கை விடுத்துள்ளது.  சங்கத்தின் உறுப்பினர் வைத்தியர் பிரசாத் கொலம்பகே இந்த எச்சரிக்கையை விடுத்துள்ளார்.

இது குறித்து அவர் மேலும் குறிப்பிடுகையில், 8000 தொற்றாளர்களை வீட்டுக்குள் தனிமைப்படுத்தி வைத்திருப்பது மிகவும் ஆபத்தான விடயம் கொரோனா சிகிச்சை மத்திய நிலையங்களில் 6000 படுக்கைகள் பயன்பாட்டுக்கு இருக்கும் நிலையில் நோயாளர்கள் வீட்டில் வைக்கப்பட்டுள்ளமை எதிர்விளைவை ஏற்படுத்தும்.

இந்த நிலையில் தொற்று நோயை எவ்வாறு கட்டுப்படுத்துவது என அவர் கேள்வி எழுப்பியுள்ளார். மே மாதம் 31ம் திகதிவரை 33140 கொரோனா தொற்றாளர்கள் சிகிச்சை பெறுவதாக சுகாதார பிரிவு அறிவித்துள்ளது. அதில் வைத்தியசாலைகளில் 17502 பேரும் வேறு மத்திய நிலையங்களில் 6800 பேரும் சிகிச்சை பெறுவதாக கூறப்படுகிறது.

அப்படியானால் மிகுதி 8000 நோயாளர்கள் எங்கே சிகிச்சை பெறுகிறார்கள் என்ற கேள்வி ஏற்படுவதாக அவர் கூறியுள்ளார். இதன்மூலம் குழப்பமான தரவுகள் முன்வைக்கப்படுகிறதா அல்லது சிகிச்சை அளிக்கும் விடயத்தில் குழப்பம் நிலவுகிறதா என்று ஆராய வேண்டுமென அவர் குறிப்பிட்டார்.

Related posts: