800 பயனாளிகளுக்கு 4 மாதங்களில் 17 கோடி ரூபாய் வருவாய் – அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா நடவடிக்கை!

Thursday, February 27th, 2020

வடமாராட்சி பிரதேசத்தில் நீர்நிலைகளில் மேற்கொள்ளப்படும் நீர் வேளாண்மையை வாழ்வாதாரமாகக் கொண்டு வாழும் சுமார் 170 குடும்பங்கள் சுமார் 4 மாத காலப் பகுதியில் அண்ணளவாக 17 கோடி ரூபாய்க்கு மேற்பட்ட வருமானத்;தை பெற்றுக் கொள்வதற்கான ஏற்பாடு அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவின் கருத் திட்டத்திற்கு அமைய மேற்கொள்ளப்பட்டது.

வடமாராட்சி பிரதேசத்தில் நீர் வேளாண்மையை அபிவிருத்தி செய்யும் நோக்கில் 40 இலட்சம் இறால் குஞ்சுகளை தொண்டமானாறு மற்றும் உப்பாறு நீர் நிலைகளில் இடுவது தொடர்பாக அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்கள் வழங்கிய ஆலோசனைக்கு அமைய கடந்த 02.02.2020 அன்று முதற்கட்டமாக இறால் குஞ்சு விடும் நிகழ்வு அமைச்சர் அவர்களினால் ஆராம்பித்து வைக்கப்பட்டது.

முதற்கட்டமாக சுமார் 10 இலட்சத்து 60 ஆயிரம் இறால் குஞ்சுகள் விடப்பட்ட நிலையில் நான்கு கட்டங்களாக மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கையின் இறுதிக்கட்டமாக இன்று(27.02.2020) சுமார் 10 இலட்சம் இறால் குஞ்சுகள் விடும் நிகழ்வு இடம்பெற்றது.

நாரா எனப்படும் தேசிய நீர்வாழ் உயரின வளர்ப்பு அபிவிருத்தி அதிகார சபையினால் மேற்கொள்ளப்பட்ட இந்த திட்டத்தின் இன்றைய இறுதிக் கட்ட நிகழ்வில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா சார்பாக ஈழ மக்கள் ஜனநாயக் கட்சியின் கோப்பாய் பிரதேச நிர்வாக செயலாளரும் பிரதேச சபை உறுப்பினருமான இராமநாதன் ஐங்கரன் மற்றும் கட்சியின் பருத்தித்துறை நகர நிர்வாக செயலாளர் குமார் ஆகியோரோடு கடற்றொழில் உத்தியோகஸ் தர்களான கிருஷணன் அகிலன்  பரம்சோதி ஜெயசீலன் சங்கரப்பிள்ளை சிவகுமார் ஆகியோரும் கலந்து கொண்டனர்.

நான்கு கட்டங்களாக சுமார் 40 இலட்சம் இறால் குஞ்சுகள் குறித்த நீர் நிலைகளில் விடப்பட்டுள்ள நிலையில் இதனூடாக தலா 1400 ரூபாய் வீதம் விற்பனை செய்யக்கூடிய சுமார் ஒரு இலட்சத்து 28 ஆயிரம் கிலோ கிராம் இறால் அறுவடை செய்ய முடியும் என்று துறைசார் நிபுணர்களினல் மதிப்பிடப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் தலைமைத்துவத்தில் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ அவர்களின் ஆலோசனையில் நாடளாவிய ரீதியில் நீர் வேளாண்மையை அபிவிருத்தி செய்யும் வேலைத் திட்டத்தினை மேற்கொண்டு வரும் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவின் கருத்திட்டத்திற்கு அமைய பல்வேறு திட்டங்கள் மேற்கொள்ளப்பட்டு நடைமுறைப்படுத்தப்பட்டு வருகின்ற நிலையில் வடக்கு கிழக்கு பிரதேசத்திலும் பல திட்டங்கள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

தற்போது இலங்கையின் மொத்தக் கடலுணவு உற்பத்தியில் நன்னீர் கடலுணவு உற்பத்தி 18 வீதமாக இருக்கின்ற நிலையில் அதனை 30 வீதமாக அதிகரிக்கும் நோக்கோடு தற்போதைய அரசாங்கதின் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தலைமையிலான கடற்றொழில் மற்றும் நீரக வள மூலங்கள் அமைச்சு செயற்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

Related posts: