80 வீதமான பாடசாலை மாணவர்கள் போஷாக்கு உணவை உட்கொள்வதில்லை!

Saturday, June 1st, 2019

பாடசாலை மாணவர்களில் 80 சதவீதமானோர் சமபோஷாக்கு நிறைந்த உணவை உட்கொள்வதில்லை என கண்டறியப்பட்டுள்ளது.

அண்மையில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வில் இந்த விடயம் கண்டறியப்பட்டதாக சுகாதார அமைச்சின் வைத்திய ஆய்வு நிறுவனத்தின் போஷாக்கு விஷேட வைத்தியர் திருமதி.ரேனுகா ஜெயதீஸ்ஸ தெரிவித்துள்ளார்.

இது பிள்ளைகளின் வளர்ச்சிக்கு பெரும் பாதிப்பாக அமைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றன.

பாடசாலைகளில் தரம் 5 மாணவர்களில் 7 சதவீதமும், தரம் 10இல் 10 சதவீத மாணவர்களும் இந்த நிலைமைக்கு உள்ளாகும் நிலை இருப்பதாகவும் அவர் தெரிவித்தார்.

இதேவேளை, பாடசாலை மாணவர்களுள் 30 சதவீதமானோர் இரத்தசோகையினால் பாதிக்கப்பட்டிருப்பதாக ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது என்றும் அவர் கூறியுள்ளார்.

சிறுபராயத்தில் இருந்தே சம போஷாக்குடன் உணவை வழங்குவது மூலம் பிள்ளைகளை தொற்றா நோயிலிருந்து பாதுகாக்க முடியும் என அவர் மேலும் தெரிவித்தார்.

Related posts: