8 ஆண்டுகள் பழமையான மீன்கள் குளிரூட்டியில் கண்டுபிடிப்பு!

Friday, August 12th, 2016

இலங்கை மீன்பிடிக் கூட்டுத்தாபன குளிரூட்டி ஒன்றில், எட்டு ஆண்டுகளாக களஞ்சியப்படுத்தப்பட்டிருந்த ஒரு தொகுதி மீன்கள் கண்டறியப்பட்டுள்ளது செய்திகள் கூறுகின்றன.

தலபத், மெகரல், கும்பலா உள்ளிட்ட சுமார் மூன்று தொன் எடையுடைய மீன் வகைகள் இவ்வாறு நீண்ட காலமாக களஞ்சியப்படுத்தி வைக்கப்பட்டிருந்தமை தெரியவந்துள்ளது.

வெளிநாடுகளிலிருந்து இறக்குமதி செய்யப்பட்ட மீன் வகைகள் களஞ்சியப்படுத்தி வைக்கப்பட்டதாகவும் இவை ஊவா மாகாணத்திற்கு விநியோகம் செய்யப்படவிருந்ததாகவும் விசாரணைகளின் மூலம் தெரியவந்துள்ளது. இவற்றுக்கு மேலதிகமாக நான்கு ஆண்டுகளாக குளிரூட்டியில் களஞ்சியப்படுத்தி வைக்கப்பட்டிருந்த சுமார் 25 தொன் எடையுடைய மீன் வகைகளும் மீட்கப்பட்டுள்ளன.

இதேவேளை, எவ்வளவு காலம் பழமையான மீன்கள் களஞ்சியப்படுத்தி வைக்கப்பட்டன என்பது பற்றி சரியான தகவல்களை வழங்க முடியாது என மீன்பிடிக் கூட்டுத்தாபன தலைவர் எஸ்.பாலசுப்ரமணியம் கொழும்பு ஊடகமொன்றுக்கு தெரிவித்துள்ளார்.காலாவதியான மீன் வகைகளை குழிதோண்டி புதைக்கும் நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகக் குறிப்பிட்டுள்ளார்.

Related posts: