70,000 மாணவர்கள் பாதிப்பு! – மேல் மாகாண கல்வி அமைச்சு
Wednesday, May 25th, 2016வௌ்ளம் காரணமாக மேல் மாகாணத்திலுள்ள 70,000க்கும் அதிகமான பாடசாலை மாணவர்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக, மேல் மாகாண கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.
இந்த மாகாணத்திலுள்ள 11 கல்வி வலயங்களில் எட்டு வலயங்களைச் சேர்ந்த மாணவர்களே இவ்வாறு பாதிப்படைந்துள்ளதாக,அமைச்சு மேலும் குறிப்பிட்டுள்ளது.
இதற்கமைய கொழும்பு வலயத்தைச் சேர்ந்த 6882 பேர், ஜயவர்த்தனபுர வலயத்தைச்சேர்ந்த 10,994 பேர், ஹோமாகம கல்வி வலயத்தைச் சேர்ந்த 5281 பேர், களனி கல்விவலயத்தைச் சேர்ந்த 31,868 பேர் இவ்வாறு பாதிப்பை எதிர்நோக்கியுள்ளதாகவும் தெரிவித்துள்ளனர்.
அத்துடன் நீர் கொழும்பு கல்வி வலயத்தின் 4611 மாணவர்களும், ஹொரன கல்விவலயத்தின் 252 மாணவர்களும் வௌ்ள அனர்த்தம் காரணமாக பாதிக்கப்பட்டடுள்ளதாகவும்குறிப்பிடப்பட்டுள்ளது.
மேலும், பாதிக்கப்பட்ட மாணவர்களுக்கு அப்பியாசக் கொப்பிகள், சீருடை, காலணிகள்மற்றும் புத்தகப் பை என்பன தேவையாகவுள்ளதோடு, இவற்றை விரைவில் பெற்றுக் கொடுக்க நடவடிக்கை எடுக்கவுள்ளதாகவும், மாகாண கல்வி அமைச்சு குறிப்பிட்டுள்ளது.
இதேவேளை, கம்பஹா மாவட்டத்தில் 10,000 மாணவர்களுக்கு அப்பியாசக் கொப்பிகள் தேவை என்பதோடு அவற்றை விரைவில் பெற்றுக் கொடுக்க நடவடிக்கை எடுத்து வருவதாக, அமைச்சு தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
Related posts:
|
|