70 மில்லியன் ரூபா பெறுமதியான மருத்துவ உபகரணங்கள் தெல்லிப்பழை ஆதார வைத்தியசாலைக்கு!

Wednesday, February 7th, 2018

தேசிய நல்லிணக்க செயற்பாட்டு திட்டத்தின் கீழ் தேசிய ஒருமைப்பாட்டு நல்லிணக்க அமைச்சினால் யாழ்ப்பாணம் தெல்லிப்பழை ஆதார வைத்தியசாலையில் சத்திரசிகிச்சைமயக்க மருந்து நிபுணத்துவ புற்றுநோய் மகப்பேறு குழந்தைகள் பராமரிப்பு உள்ளிட்ட பிரிவுகளை மேம்படுத்துவதற்காக 70 மில்லியன் ரூபா பெறுமதியான மருத்துவஉபகரணங்கள் வழங்கப்பட்டுள்ளன.

இந்த நிகழ்வில் பிரதம அதிதியாக தேசிய ஒருமைப்பாட்டு மற்றும் நல்லிணக்க அமைச்சின் செயலாளர் வி.சிவஞானசோதி கலந்து கொண்டு உபகரணங்களை வழங்கினார்.

இதன் மூலம் வடமாகாணத்திலுள்ளவர்கள் பயனடையமுடியும் எனவும் வெளி மாவட்டங்களிலிருந்து புற்றுநோய் சிகிச்சைக்காக வரும் நோயாளிகள் தங்கியிருந்து சிகிச்சைபெறுவதற்கான விடுதிகளும் இங்கு அமைக்கப்பட்டு வருவதாகவும்  அமைச்சின் செயலாளர்  குறிப்பிட்டுள்ளார்.

மேலும் இந்த நிகழ்வில் யாழ்.மாவட்ட செயலாளர் நா.வேதநாயகன் மருத்துவமனையின் பணிப்பாளர் வைத்திய கலாநிதி திவாகர், வைத்திய நிபுணர்கள் உள்ளிட்ட பலரும்கலந்து கொண்டனர்.

Related posts: