70வது ஆண்டு பூர்த்தியை எட்டும் நாடாளுமன்றம்!

Sunday, September 24th, 2017

நாடாளுமன்றத்தில் விசேட அமர்வு ஒக்டோபர் மாதம் மூன்றாம் திகதி பிற்பகல் 3.30 க்கும் 4.30 க்கும் இடைப்பட்ட காலப்பகுதியில் இடம்பெற்றவுள்ளது.

நாடாளுமன்றத்தில் 70 ஆண்டுகள் நிறைவடைந்ததை முன்னிட்டு இந்த விசேட அமர்வு இடம்பெற இருப்பதாக சபாநயகர் கரு ஜயசூரிய நேற்று நாடாளுமன்றத்தில் இதனை அறிவித்தார்.

நாடாளுமன்ற அலுவலகர்கள் குழுவில் நேற்று முன்தினம் இது தொடர்பான தீர்மானம் மேற்கொள்ளப்பட்டது. இதற்கமைவாக இம்மாதம் 26ஆம் திகதியும் எதிர்வரும் ஒக்டோபர் மாதம் 9ஆம் திகதியும் பிற்பகல் 1.00 மணி தொடக்கம் மாலை 7.30 வரையில் ஏனைய அமர்வுகள் இடம்பெறும் என்றும் தெரிவித்துள்ளார்.

 

Related posts: