7 வரு­டங்­க­ளாக தொழில்­ அதி­கா­ரிகள் நிரப்பப்­ப­ட­வில்­லை!

Monday, July 4th, 2016

தொழில்துறைசார் அதிகாரிகள் மாட்டு வண்டி யுகத்திலிருந்து விடுபட்டு புதிய நவீன தொழில்நுட்ப யுகத்திற்கு மாற வேண்டும், இல்லாவிட்டால் நாட்டுக்கும் பொருளாதாரத்துக்கும் முதுகெலும்பாகத் திகழும் தனியார் துறையின் வீழ்ச்சிக்கு வழிவகுக்கும் என அமைச்சர் ஜோன் செனவிரட்ன தெரிவித்துள்ளார்.

தொழில் அமைச்சில் 202 வெற்றிடங்கள் நிலவுகின்றன. கடந்த ஏழு வருடங்களாக எந்தவொரு வெற்றிடமும் நிரப்பப்படவில்லை என்றும் அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.

நாரஹேன்பிட்டி சாலிகா மண்டபத்தில் கடந்த வெள்ளிக்கிழமை இடம்பெற்ற அரச சேவை ஊழியர் உத்தியோகத்தர் சங்கத்தின் 65ஆவது வருடாந்த மாநாட்டில் கலந்து கொண்டு உரையாற்றுகையி­லேயே தொழில் மற்றும் தொழிற்சங்க உறவுகள் அமைச்சர் ஜோன் செனவிரட்ன மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

அவர் தொடர்ந்தும் உரையாற்றுகையில்-

கடந்த 7 வருடகாலமாக எந்தவொரு தொழில்துறைசார் அதிகாரிகளும் தொழில் அமைச்சிற்கு இணைத்துக் கொள்ளப்படவில்லை. 202 வெற்றிடங்கள் தொழில் திணைக்களத்தில் நிலவுகின்றன. வெகு விரைவில் தமிழ் மொழிமூலம் தொழில்துறைசார் அதிகாரிகள் 26 பேர் இணைத்துக்கொள்ளப்ப­டவுள்ளதோடு, 202 வெற்றிடங்களும் நிரப்பப்படும்.

தொழில்துறைசார் அதிகாரிகள் நாட்டின் பொருளாதாரத்திற்கு பரந்தளவில் தமது பங்களிப்பினை வழங்குகின்றனர். இவர்கள் தனியார் துறையின் உயர்வுக்கும் வழிநடத்தலுக்கும் பங்களிப்பை வழங்கி நாட்டின் பொருளாதார உயர்வுக்கும் வழிவகுக்கும் அதிகாரிகள் ஆவர். இவ்வாறானவர்கள் தமது தொழில்சார் உரிமைகளை பெற்றுக் கொள்வதற்காக வீதியில் இறங்குவது கேலிக் கூத்தாக அமைந்து விடும்.

நாட்டின் உழைக்கும் வர்க்கத்தினரின் உரிமைகளுக்காக சேவைபுரிவோர் தமது உரிமைகளுக்காக வீதியில் இறங்கக்கூடாது. உங்களுக்கு எதுவும் பிரச்சினைகள் இருப்பின் என்னிடம் முறையிடுங்கள். அதற்கு நிச்சயம் தீர்வுகளை பெற்றுக் கொடுப்பேன்.

உலகம் இன்று நவீன தொழில்நுட்ப யுகத்திற்குள் பிரவேசித்துள்ள நிலையில் நாம் மாட்டு வண்டி யுகத்திலிருந்து விடுபட்டு புதிய நவீன யுகத்திற்கு செல்ல வேண்­டும் என்­றார்.

Related posts: