7 மாணவர்களுக்கு  நீதிமன்றம் நோட்டீஸ்!

Wednesday, July 27th, 2016
யாழ். பலகலையில் இடம்பெற்ற மோதலுக்கு காரணமானவர்கள் என்று நம்படும் மாணவர்கள் 7 பேருக்கு, நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
குறித்த மாணவர்கள் 7 பேரையும் எதிர்வரும் முதலாம் திகதி நீதிமன்றத்தில் முன்னிலையாகுமாறு நீதிமன்றம் அனுப்பி வைத்துள்ள  நோட்டீஸில் உத்தரவிடப்பட்டுள்ளது.
யாழ் பல்கலைகழக மாணவர்களுக்கான இந்த உத்தரவை யாழ். மாவட்ட நீதவான் நீதிமன்ற நீதவான் எஸ்.சதீஸ்வரன் பிறப்பித்துள்ளார். கடந்த இருவாரங்களுக்கு முன்னர் பல்கலைகழக தமிழ் மற்றும் சிங்கள மாணவர்களுக்கிடையில் மோதல் சம்பவம் ஒன்று இடம் பெற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Related posts: