65000 பொருத்து வீட்டுத்திட்டம்:  முதற்கட்ட பயனாளிகளின் பெயர்கள் வெளியிடப்பட்டுள்ளன!

Friday, April 15th, 2016

65000 பொருத்து வீட்டுத் திட்டத்தில் வீடுகளை பெற்றுக் கொள்ளவுள்ள பயனாளிகளின் பெயர் பட்டியலை மீள்குடியேற்றம், புனர்வாழ்வு மற்றும் இந்து மத அலுவல்கள் அமைச்சு வெளியிட்டுள்ளது.

இதன்படி, முதற்கட்டமாக யாழ் மாவட்டத்தின் சாவகச்சேரி, ஊர்காவற்துறை, மருதங்கேணி மற்றும் சண்டிலிப்பாய் ஆகிய பகுதிகளைச் சேர்ந்தவர்கள் உள்வாங்கப்பட்டுள்ளனர்.

இதற்கமைய, சாவகச்சேரி பகுதியில் 4213 பேரின் பெயர்களும், ஊர்காவற்துறை பகுதியில் 478 பேரின் பெயர்களும், மருதங்கேணி பகுதியில் 802 பேரின் பெயர்களும், சண்டிலிப்பாய் பகுதியில் 1379 பேரின் பெயர்களும் வெளியிடப்பட்டுள்ளன.

கீழுள்ள இணைப்புகளை கிளிக் செய்வதன் மூலம் முழுமையான விபரங்களை பார்வையிட முடியும்

sandilipay

maruthankerny

kayts

chavakachcheri

 

Related posts: