60 வயதுக்கு மேற்பட்ட நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு மூன்றாவது கொவிட் தடுப்பூசி – சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் தகவல்!

Saturday, November 6th, 2021

அறுபது வயதுக்கு மேற்பட்ட மற்றும் பல்வேறு சிக்கல்களான நோய் நிலைமைகளைக் கொண்டுள்ள நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு, மூன்றாவது செயலூக்கி கொவிட் தடுப்பூசியாக பைஸர் தடுப்பூசியைச் செலுத்த  தீர்மானிக்கப்பட்டுள்ளதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் அசேல குணரத்ன தெரிவித்துள்ளார்.

அத்துடன் நாரஹேன்பிட்டியில் உள்ள இராணுவ வைத்தியசாலையில் இந்தத் தடுப்பூசி திட்டம் ஆரம்பிக்கப்படவுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்..

இந்தத் தடுப்பூசி வழங்கும் வேலைத்திட்டம் எதிர்வரும் 8 ஆம் திகதிமுதல் 12 ஆம் திகதி வரை தினமும் காலை 9.00 மணிமுதல் பிற்பகல் 2.00 மணி வரை முன்னெடுக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts: