6 மாதங்களுக்கு பின் மீண்டும் யாழ்ப்பாணத்திற்கான சேவையை ஆரம்பித்தது யாழ்தேவி – நீண்ட தூர புகையிரத சேவைகளும் இன்றுமுதல் முன்னெடுப்பு!

காங்கேசன்துறை – கல்கிஸை இடையிலான யாழ்.தேவி புகைரத சேவைகள் இன்று (03.11) தொடக்கம் மீள ஆரம்பிக்கப்பட்டிருப்பதாக புகைரத திணைக்களம் அறிவித்துள்ளது.
கொரோனா அச்சுறுத்தலால் ஏற்படுத்தப்பட்ட பிரயாணத்தடை காரணமாக கடந்த 6 மாத காலமாக இடைநிறுத்தப்பட்டிருந்த இந்த புகையிரத சேவை இன்று காலை 5.55 மணியளவில் கால்கிஸை புகையிரத நிலையத்திலிருந்து பயணத்தை ஆரம்பித்துள்ளது.
இந்த புகையிரதம் மீண்டும் நாளை (04) காலை 5.30 மணியளவில் காங்கேசன்துறையிலிருந்து கல்கிஸை வரை மீண்டும் பயணிக்குமென புகையிரத திணைக்களம் மேலும் அறிவித்துள்ளது.
இதேவேளை கொவிட்-19 தொற்றுப் பரவலால் பல வாரங்களாக ரயில் சேவைகள் நிறுத்தப்பட்டிருந்தன. பின்னர் குறைந்த எண்ணிக்கையிலான ரயில்கள் கடந்த வாரம்முதல் இயக்கப்படுகின்றன.
கொழும்பு கோட்டை மற்றும் மாத்தறை, கண்டி, காங்கேசன்துறை நிலையங்களுக்கிடையில் நான்கு அதிவேக புகையிரதங்களும் ஆறு நகரங்களுக்கு இடையிலான அதிவேக புகையிரதங்களும் சேவையில் ஈடுபடவுள்ளதாக ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
000
Related posts:
|
|