6 இலட்சம் பாடசாலை மாணவர்கள் காலை உணவின்றி பாடசாலைக்கு செல்கின்றனர் – வெளிப்படுத்தியது நாடாளுமன்ற வழிகள் மற்றும் வழிமுறைகள் குழு!

600,000 பாடசாலை மாணவர்கள் காலை சிற்றுண்டி இன்றி பாடசாலைக்கு வருவதாக பாடலி சம்பிக்க ரணவக்க தலைமையிலான நாடாளுமன்ற வழிகள் மற்றும் வழிமுறைகள் குழு வெளிப்படுத்தியுள்ளது.
பாடசாலை மாணவர்களுக்கு உணவு வழங்கும் திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டதன் பின்னர் பாடசாலைக்கு சிறுவர்களின் வருகை அதிகரித்துள்ளதாகவும் குழுவில் தகவல் வெளியாகியுள்ளது.
மேலும், ஆரம்ப தரத்தில் உள்ள பாடசாலை மாணவர்களுக்கு உணவு வழங்கும் வேலைத்திட்டத்தின் முன்னேற்றம் குறித்த அறிக்கையை வழங்குமாறு கல்வி அமைச்சுக்கு குழு அறிவித்துள்ளது.
அத்துடன் பாடசாலை மாணவர்களுக்கு வழங்கப்படும் உணவுக்காக வருடாந்தம் 1600 கோடி ரூபாவிற்கும் அதிகமான பணம் செலவிடப்படுவதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
மேலும் பாடசாலை மாணவர்களுக்கு உணவு வழங்கும் நிகழ்ச்சித் திட்டத்திற்கு உதவி வழங்க விரும்பும் வெளிநாடுகளில் உள்ள இலங்கையர்களுக்கு முறையான முறைமை ஒன்றைத் தயாரிப்பதற்கும் குழு அறிவுறுத்தல்களை வழங்கியுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.
000
Related posts:
|
|