59 பொலிஸார் அதிரடியாக பணிமாற்றம்!

Wednesday, November 1st, 2017

அநுராதபுரம் பொலிஸ் போக்குவரத்து பிரிவின் கீழ் பணியாற்றிய பொலிஸார் அனைவரும் உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் பணிமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.

59 பொலிஸார் நேற்று(31) முதல் இவ்வாறு பணிமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.வட, மத்திய மற்றும் வட, மேல் மாகாணங்களுக்கு பொறுப்பான சிரேஷ்ட பொலிஸ்மா அதிபர் ஜகத் அபேசிறி குணவர்தனவின் உத்தரவுக்கு அமைய, பணி அவசியம் கருதி இவ்வாறு பணிமாற்றம் வழங்கப்பட்டுளளது.இதேவேளை, அவர்கள் முன்னர் பணியாற்றிய பொலிஸ் நிலையங்களில் மீண்டும் பணிக்காக அமர்த்தப்படவுள்ளனர்.

Related posts: