57 பாடசாலைகள் ஜனவரி 15 வரை மூடப்படும்!

Saturday, December 9th, 2017

57 பாடசாலைகளில் க.பொ.த சாதாரண தர பரீட்சையின் விடைத்தாள்கள் திருத்தும் பணிகள் நடைபெறவிருப்பதோடு குறித்த பாடசாலைகளுக்கான முதலாம் தவணை கல்விநடவடிக்கைகள் எதிர்வரும் 2018 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 15 ஆம் திகதி ஆரம்பமாகும் என்று பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.

குறித்த விடைத்தாள்கள் இரு பகுதிகளாக திருத்தப்படவுள்ளதாகவும் இதன் முதல் பகுதியாக 57 பாடசாலைகளை முழுமையாக மூடி விடைத்தாள் திருத்தும் பணிகளுக்கு பயன்படுத்தவுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், திருத்தும் பணிகள் எதிர்வரும் ஜனவரி 2 ஆம் திகதி ஆரம்பித்து பெப்பிரவரி 3 ஆம் திகதி முடிவடையும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. க. பொ. த சாதாரண தர பரீட்சை எதிர்வரும்12 ஆம் திகதி ஆரம்பிக்கப்பட்டு எதிர்வரும் 21 ஆம் திகதி வரை நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related posts: