5400 பஸ்களை சேவையில் – இலங்கைப் போக்குவரத்துச் சபையின் அதிரடி!

Thursday, May 31st, 2018

இலங்கை போக்குவரத்துச் சபை மேலதிகமாக போக்குவரத்துச் சேவைகளை நடத்துவதற்கு நடவடிக்கை மேற்கொண்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

தொடருந்து தொழிற் சங்கம் ஆரம்பித்துள்ள பணிப்புறக்கணிப்பினால் பாதிக்கப்படும் பயணிகளின் நலனைக் கருத்தில் கொண்டே இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இதுவரை இலங்கை போக்குவரத்து சபை  5400 பஸ்களை சேவையில் ஈடுபடுத்துகின்றது. பணிப் பகிஷ்கரிப்பு காரணமாக இதனை 5700 ஆக அதிகரிப்பதற்கு நடவடிக்கைமேற்கொள்ளப்பட்டுள்ளதாக இலங்கை போக்குவரத்து சபையின் பிரதி பொது முகாமையாளர் பி.எச்.ஆர்.டி.சந்திரசிறி தெரிவித்துள்ளார்.

முக்கியமாக தொடருந்துச் சேவை அதிகளவில் இடம் பெறும் மாகாணங்களை இலக்காக கொண்டு சம்பந்தப்பட்ட டிப்போக்கள் மூலம் பயணிகளுக்கு பிரச்சினை ஏற்படாத வகையில் பஸ்சேவைகளை மேற்கொள்ளுமாறு ஆலோசனை மேற்கொள்ளப்பட்டுள்ளது. அத்துடன் முக்கிய விடயங்கள் தவிர்ந்த பஸ் ஊழியர்களுக்கான விடுமுறைகள் வரையறுக்கப்பட்டு இருப்பதாகதெரிவிக்கப்பட்டது.

Related posts: