53 யோசனைகளை நிராகரித்தது இலங்கை!

ஐ.நா. மனித உரிமைகள் பேரவையின் இலங்கை தொடர்பான மூன்றாவது பூகோள பருவகால மீளாய்வு கூட்டத்தொடரில், சர்வதேச நாடுகளால் முன்வைக்கப்பட்ட யோசனைகளில் 53 யோசனைகள் இலங்கை நிராகரித்துள்ளது.
ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையில் இலங்கை தொடர்பான மூன்றாவது பூகோள பருவகால மீளாய்வு கூட்டத்தொடரில் சர்வதேச நாடுகளால் இலங்கை தொடர்பில் 230 யோசனைகள் முன்வைக்கப்பட்டுள்ளன.
ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையில் பேரவையில் கடந்த புதன்கிழமை இடம்பெற்ற இலங்கை தொடர்பான மூன்றாவது பூகோள பருவகால மீளாய்வு கூட்டத்தில், மனித உரிமைகள் தொடர்பாக இலங்கை நிறைவேற்ற வேண்டிய 230 பரிந்துரைகள் பல்வேறு நாடுகளால் முன்வைக்கப்பட்டிருந்தன.இந்த நிலையில், இலங்கை தொடர்பான மூன்றாவது பூகோள பருவகால மீளாய்வு கூட்டத்தொடரின் தீர்மானம் மனித உரிமைகள் பேரவையில் நேற்று நிறைவேற்றப்பட்டது.
இதன்போது, இலங்கை சார்பில் உரையாற்றிய பிரதி அமைச்சர் ஹர்ஷ டி சில்வா, பேரவையில் முன்வைக்கப்பட்ட 230 பரிந்துரைகளில், 177 பரிந்துரைகளை மாத்திரம் இலங்கை அரசாங்கம் ஏற்றுக் கொள்வதாக கூறியுள்ளார்.
ஏனைய 53 பரிந்துரைகளை இலங்கை கவனத்தில் கொண்டுள்ளதாக அமைச்சர் குறிப்பிட்டுள்ளார். இதேவேளை, தன்னார்வ அடிப்படையில் 12 வாக்குறுதிகளை இலங்கை வழங்கி இருப்பதாவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
Related posts:
|
|