53 இலங்கையர்களை திருப்பி அனுப்பியது இஸ்ரேல்!

Friday, February 22nd, 2019

இலங்கையிலிருந்து யாத்திரையாக இஸ்ரேலுக்கு சென்றிருந்த 53 பேர் நாட்டிற்கு திருப்பி அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தின் குடிவரவு குடியகல்வு திணைக்கள அதிகாரி ஒருவர் குறிப்பிட்டார்.

குறித்த நபர்கள் தொடர்பில் அந்நாட்டு அதிகாரிகளுக்கு கிடைத்த உளவுத் தகவலுக்கு அமைய அவர்கள் திருப்பி அனுப்பப்பட்டுள்ளனர்.

சட்டவிரோதமாக இவர்கள் இஸ்ரேலுக்கு சென்றுள்ளமை விசாரணைகளில் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

மேலதிக விசாரணைகளுக்காக இவர்கள் குற்றப்புலனாய்வுத் திணைக்களம் மற்றும் தேசிய புலனாய்வுப் பிரிவினரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.

Related posts: