53 ஆயிரம் பயிலுநர் பட்டதாரிகளுக்கு அரச நிறுவனங்களில் விரைவில் நியமனம் – துறைசார் அமைச்சுகளுக்கு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ அறிவுறுத்து!

நாட்டில் தற்போது பயிற்சியில் அமர்த்தப்பட்டிருக்கும் 53 ஆயிரம் பயிலுநர் பட்டதாரிகளை எதிர்வரும் மூன்று மாதங்களுக்குள் அரச நிறுவனங்களில் பணிகளுக்காக நியமிக்குமாறு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ அறிவுறுத்தல் வழங்கியுள்ளதாக அமைச்சரவை பேச்சாளரும் வெகுசன ஊடகத்துறை அமைச்சருமான டலஸ் அழகப்பெரும தெரிவித்துள்ளார்.
அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் அரசாங்க தகவல் திணைக்களத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் இதனை தெரிவித்துள்ளார்.
இந்த விடயம் தொடர்பில் தேவையான நடவடிக்கைகளை முன்னெடுப்பதற்கான பொறுப்பை, கல்வி அமைச்சர் தினேஷ் குணவர்தன, மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சர் ஜனக பண்டார தென்னகோன் மற்றும் நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்பு அமைச்சர் வாசுதேவ நாணயக்கார ஆகியோரிடம் ஜனாதிபதி கையளித்துள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
000
Related posts:
யாழ் பல்கலை காலவரையின்றி மூடல்!
வல்லிபுர ஆழ்வார் ஆலயத்திற்குள் நுழைய 14 நாட்கள் தடை - காய்ச்சலுடன் சுவாமி காவியவரால் மூவர் தனிமைப்பட...
இலங்கையின் ஜனாதிபதி கோட்டாபய மற்றும் அவரின் சகோதரர் பசில் வெளியேறுவதற்கு உதவவில்லை – இந்தியா மறுப்பு...
|
|