520 பேர் நோய்த் தொற்றிலிருந்து குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர் என இராணுவ தளபதி தெரிவிப்பு!

Sunday, May 17th, 2020

இலங்கையில் நேற்றைய தினமும் 25 கொரோனா நோயாளிகள் அடையாளம் காணப்பட்டுள்ளதாக இராணுவ தளபதி சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.

நேற்று இரவு மேலும் 3 கொரோனா நோயாளிகள் அடையாளம் காணப்பட்டுள்ள நிலையில், இலங்கையில் குறித்த நோய்த் தொற்றுக்கு உள்ளாகியவர்களின் எண்ணிக்கை 960 ஆக அதிகரித்துள்ளது என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

அத்துடன் நேற்று அடையாளம் காணப்பட்ட 25 பேரில் 23 பேர் கடற்படை சிப்பாய்கள் என இராணுவ தளபதி குறிப்பிட்டுள்ளார்.

ஏனைய இருவரும் தனிமைப்படுத்தல் நிலையங்களில் இருந்தவர்கள் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இதனிடையே இலங்கையில் இதுவரையில் 520 பேர் கொரோனா வைரஸ் தொற்றில் இருந்து முழுமையாக குணமடைந்து வீடு திரும்பியுள்ளதாகவும், 430 பேர் தொடர்ந்தும் சிகிச்சை பெற்று வருகின்றனர் என்றும் அவர் மேலும் தெரிவித்தள்ளார்

இந்நிலையில் குறித்த கொரோனா நோய்த்தொற்று காரணமாக இதுவரை 9 பேர் பலியாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts:


  பட்டம் சிக்குண்டதே நேற்றைய தினம் மின்சாரம் தடைப்பட்டதற்கு காரணம் - மின்சார சபையின் வடமாகாண முகாமை...
எரிபொருள் - மின் பாவனையை சிக்கனப்படுத்த அரச நிறுவனங்களுக்கு பொது சேவைகள் அமைச்சு விடுத்துள்ள அறிவுறு...
மின்னுற்பத்திக்கான எரிபொருள் இன்மையால் வார இறுதி நாட்களிலும் மின்வெட்டு - இலங்கை பொதுப் பயன்பாடுகள் ...