50,000 விவாகரத்து வழக்குகள் விசாரணை – இலங்கை போன்ற சிறிய நாட்டிற்கு பெரிய எண்ணிக்கையிலான வழக்குகளாக கருதப்படுவதாக நீதி அமைச்சர் சுட்டிக்காட்டு!

நாட்டில் டிசம்பர் 2022 நிலவரப்படி சுமார் 50,000 விவாகரத்து வழக்குகள் நீதிமன்றங்களில் விசாரிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
நேற்று ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த நீதியமைச்சர் விஜயதாச ராஜபக்ஷ இதனை குறிப்பிட்டுள்ளார்.
நீதியமைச்சர் விஜயதாச ராஜபக்ஷ வெளியிட்டுள்ள புள்ளிவிபரங்களின்படி, 48,391 விவாகரத்து வழக்குகள் 2022 டிசம்பர் 31 வரை நீதிமன்றங்களில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டுள்ளன.
இந்தநிலையில் , இலங்கை போன்ற ஒரு சிறிய நாட்டிற்கு இது ஒரு பெரிய எண்ணிக்கையிலான வழக்குகளாக கருதப்படுகிறது என அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.
000
Related posts:
பார்வையிட வருவதை தவிருங்கள் - யாழ்ப்பாணம் போதனா மருத்துவமனைப் பணிப்பாளர்!
உயர்தரப் பரீட்சை விடைத்தாள்கள் திருத்தும் பணிகள் ஆரம்பம்!
ராஜீவ் காந்தியை கொலைசெய்த பயங்கரவாத அமைப்பை 14 வருடங்களுக்கு முன் முழுமையாக அழித்தோம் - அமைச்சர் அலி...
|
|