5,000 ரூபா கொடுப்பனவு இன்றுமுதல் நடைமுறைக்கு!

Wednesday, June 2nd, 2021

நடமாட்ட கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளதால் பாதிக்கப்பட்டுள்ள தெரிவு செய்யப்பட்ட குடும்பங்களுக்காக 5 ஆயிரம் ரூபா இடர்கால கொடுப்பனவு வழங்கும் நடவடிக்கை இன்றுமுதல் நடைமுறைப்படுத்தப்பட்டு வருகின்றது.

அரசாங்கத்தின் பல்வேறு கொடுப்பனவுகளை பெரும் குறைந்த வருமானம் பெறும் குடும்பங்களுக்காகவும் நடமாட்ட கட்டுப்பாடுகளால் வாழ்வாதாரத்தை இழந்துள்ள குடும்பங்களுக்காகவும் இந்த கொடுப்பனவு வழங்கப்படுகின்றது.

இதற்காக சுமார் 30 பில்லியன் ரூபாய் நிதியை ஒதுக்குவதற்கு எதிர்பார்த்துள்ளதாக அரசாங்கம் தெரிவித்துள்ளது.

முதியோர் கொடுப்பனவு, விவசாய, கடற்றொழில் ஓய்வூதிய வேதனம், சமுர்தி பயனாளர்களுக்குமான கொடுப்பனவோடு இந்த கொடுப்பனவின் எஞ்சிய பணத்தை சேர்த்து 5, ஆயிரம் ரூபா வழங்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.

Related posts: