5,000 ரூபா கொடுப்பனவில் முறைகேடு: இழந்த பணத்தை மீள பெற நடவடிக்கை என தேசிய கணக்காய்வு அலுவலகத்தின் கணக்காய்வாளர் தெரிவிப்பு!
Wednesday, July 21st, 2021கொரோனா தொற்று காரணமாக பாதிக்கப்பட்டவர்களுக்கு வழங்கப்பட்ட 5,000 ரூபா கொடுப்பனவில் இடம்பெற்ற முறைகேடுகள் குறித்து அந்தந்த பிரதேச செயலாளர்களுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.
தேசிய கணக்காய்வு அலுவலகத்தினால் முன்னெடுக்கப்பட்ட ஆய்வுகளின் பின்னர் அது குறித்து அறிவிக்கப்பட்டுள்ளது.
குறிப்பிட்ட தொகைக்கு அதிகமான பணம், இந்த நிவாரணத் திட்டத்தினூடாக வழங்கப்பட்டுள்ளதாக தேசிய கணக்காய்வு அலுவலகத்தின் கணக்காய்வாளர் W.P.C. விக்ரமரத்ன தெரிவித்துள்ளார்.
இவ்வாறான சம்பவங்களினால் இழக்கப்பட்ட பணத்தை மீள பெற்றுக் கொள்வதற்கான பரிந்துரைகளும் தேசிய கணக்காய்வு அலுவலகத்தினால் பிரதேச செயலகங்களுக்கு முன்வைக்கப்பட்டுள்ளன.
இது குறித்த விரிவான அறிக்கையை எதிர்வரும் நாட்களில் நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கவுள்ளதாகவும் தேசிய கணக்காய்வு அலுவலகத்தின் கணக்காய்வாளர் W.P.C. விக்ரமரத்ன மேலும் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
Related posts:
|
|