5,000 மெற்றிக் தொன் நெல் கொள்வனவு – நெல் சந்தைப்படுத்தல் சபை தலைவர்!

Wednesday, April 17th, 2019

நெல் கொள்வனவு செய்யப்பட்டு களஞ்சியப்படுத்தும் செயற்பாடுகள் இன்று (17) முதல் ஒரு மாத காலத்திற்கு விரிவாக முன்னெடுக்கப்படும் என, நெல் சந்தைப்படுத்தல் சபை தெரிவித்துள்ளது.

இந்த மாதத்தில் விவசாயிகளிடமிருந்து கொள்வனவு செய்யப்படும் நெற்தொகைகள் உரிய முறையில் களஞ்சியப்படுத்தப்படவுள்ளது.

இவற்றைக் களஞ்சியப்படுத்தவதற்குத் தேவையான அனைத்து வசதிகளும் செய்யப்பட்டுள்ளன.

இதுவரை 5,000 மெற்றிக் தொன் நெல் கொள்வனவு செய்யப்பட்டுள்ளதாக சபையின் தலைவர் கஸ்தூரி அனுராதநாயக்க தெரிவித்துள்ளார்.

நாடளாவிய ரீதியில் நெல் களஞ்சியசாலைகள் ஸ்தாபிக்கப்பட்டுள்ளதாகவும் சபையின் தலைவர் கஸ்தூரி அனுராதநாயக்க மேலும் தெரிவித்துள்ளார்.

Related posts: