5000 பேரை பொலிஸ் சேவையில் இணைத்துக்கொள்ள நடவடிக்கை!

5000 சிவில் பாதுகாப்புப் படையினரை பொலிஸ் சேவையில் இணைத்துக்கொள்வதற்கு நடவடிக்கை எடுக்குமாறு ஜனாதிபதி பணிப்புரை விடுத்துள்ளதாக சிவில் பாதுகாப்பு திணைக்களம் தெரிவித்தது.
முதற்கட்டமாக 2900 சிவில் சேவையாளர்களை பொலிஸ் சேவையில் இணைத்துக்கொள்ள நடவடிக்கை எடுக்கவுள்ளதாக சிவில் பாதுகாப்பு திணைக்களத்தின் ஆணையாளர் நாயகம் சந்திரரத்ன பல்லேகம தெரிவித்தார்.
இணைத்துக்கொள்ளப்படும் சிவில் சேவையாளர்கள் நடமாடும் பொலிஸ் சேவையில் இணைத்துக்கொள்ளப்படவுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்அநுராதபுரம், பொலன்னறுவை, அம்பாறை, புத்தளம், திருகோணமலை உள்ளிட்ட மாவட்டங்களில் இவர்கள் சேவைக்கு அமர்தப்படவுள்ளனர்.
அத்துடன், 480 சிவில் பாதுகாப்பு அதிகாரிகள் தொல்லியல் தளங்களின் பாதுகாப்பு சேவைகளுக்கு அமர்த்தப்படுவார்கள் என சிவில் பாதுகாப்பு திணைக்களத்தின் ஆணையாளர் நாயகம் சந்திரரத்ன பல்லேகம தெரிவித்தார்.
Related posts:
|
|