5000 புசல் விதை நெல் விவசாயிகளிடம் கொள்வனவு – விதை உற்பத்திச் சங்கம் தீர்மானம்!

07-paddy-thresher-machine-600 Monday, March 20th, 2017

யாழ்ப்பாண மாவட்ட உற்பத்திக் கூட்டுறவுச் சங்கம் இந்த முறை 5000 புசல் விதை நெல்லை விவசாயிகளிடமிருந்து கொள்வனவு செய்யத் தீர்மானித்துள்ளதாக சங்கத்தின் பொது முகாமையாளர் ரவிமயூரன் தெரிவித்துள்ளார்.

சங்கத்தால் பதிவு செய்யப்பட்ட விவசாயிகளிடம் இருந்து நெல் கொள்வனவு செய்யப்படும் நெல் வழமை போன்று சங்கத்தால் ஆய்வுக்குட்படுத்தப்படும். ஆய்வுக்கு உட்படுத்திய பின்னர் இந்த விதை நெல் இந்த ஆண்டின் பெரும் போக நெற் செய்கைக்கு விவசாயிகளுக்கு வழங்கவும் ஏற்ற நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்றார்.

கடந்த 2016ஆம் ஆண்டில் சங்கம் 3,500 வரையிலான புசல் விதை நெல்லை கொள்வனவு செய்து விவசாயிகளுக்கு வழங்கியிருந்தது. இந்தமுறை காலபோகச் செய்கை போதிய மழை வீழ்ச்சி இன்மையால் பாதிக்கப்பட்டுள்ளது இதன் காரணத்தால் கூடுதலான விதை நெல்லைக் கொள்வனவு செய்யவும் சங்கம் தீர்மனித்துள்ளது இந்த முறை செய்கைக்குத் தேவையான விதை நெல்லுக்குப் பற்றாக்குறை ஏற்படலாம் என்றும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது,


30595327_1734584803247266_6799777560008851456_n

போற போக்கைப் பார்த்தா நம்மிட பிறந்த தினங்களையும் மாத்திப்போடுவாங்க போல இருக்கு!…