500 புதிய பேருந்துகள் கொள்வனவு : அமைச்சரவை அனுமதி!

Thursday, June 7th, 2018

இலங்கை போக்குவரத்து சபைக்கு மேலும் 500 பேருந்துகளை கொள்வனவு செய்வதற்கு அமைச்சரவை அனுமதி கிடைக்கப்பெற்றுள்ளது.

பயணிகள் போக்குவரத்திற்காக 7257 அரச பேருந்துகள் தேவைப்படும் நிலையில் , தற்போது 6000 பேருந்துகள் மாத்திரமே சேவையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளன.

இதில் 15 வருடத்திற்கும் மேற்பட்ட 1560 பேருந்துகள் உள்ளன எனவும் அவற்றில் அடிக்கடி இயந்திர கோளாறுகள் ஏற்படுவதால் பயணிகளின் தேவைகளை உரிய வகையில் வழங்கமுடியாதுள்ளது. அத்துடன் வருடமொன்றுக்கு சுமார் 500 பேருந்துகள் சேவையில் இருந்து அகற்றப்படுகின்றன.

குறித்த விடயங்களை கருத்திற் கொண்டு நகர்ப்புற மற்றும் கிராமப்புற பயணிகள் சேவைக்காக புதிதாக 500 பேருந்துகளை கொள்வனவு செய்ய திட்டமிடப்பட்டுள்ளது.

Related posts: