500 அமெரிக்க டொலர் கடன் உடன்படிக்கையில் இந்தியா – இலங்கை இடையே இன்று ஒப்பந்தம் கைச்சாத்து!

Wednesday, February 2nd, 2022

எரிபொருள் கொள்வனவுக்காக இந்தியா வழங்கும் 500 மில்லியன் அமெரிக்க டொலர் கடனுக்கான இரண்டு நாடுகளுக்கு இடையிலான உடன்படிக்கை இன்று கைச்சாத்திடப்படவுள்ளது.

எரிபொருள் கொள்வனவுக்காக இலங்கைக்கு 500 மில்லியன் அமெரிக்க டொலர் கடனுதவி வழங்க அண்மையில் இந்தியா அனுமதி வழங்கியிருந்தது.

நாட்டில் காணப்படும் எரிபொருள் தட்டுப்பாட்டை நிவர்த்திப்பதற்காக இந்த கடனுதவியை வழங்க இந்தியா இணக்கம் தெரிவித்தது.

இதேவேளை, எதிர்காலத்தில் இந்தியாவில் இருந்து நேரடியாக மின்சாரத்தை பெற்றுக்கொள்வது தொடர்பிலும் கலந்துரையாடல்கள் இடம்பெற்று வருவதாக அரசாங்கத் தகவல்கள் தெரிவிக்கின்றமை குறிப்பிடத்தக்கது.

Related posts: