50 வீத மானியத்தில் வழங்கப்பட இறக்குமதி செய்யப்படும் 220 மெற்றிக்தொன் உ.கிழங்கு!

Tuesday, November 13th, 2018

220 மெற்றிக்தொன் விதை உருளைக்கிழங்குகள் வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்படவுள்ளன. சசி ரக உருளைக்கிழங்கு 145.5 மெற்றிக்தொன், பிறாடா ரக உருளைக்கிழங்கு 50 மெற்றிக்தொன், றெட்லைட் சோடா 24.5 மெற்றிக்தொன் என்றவாறாகவே இறக்குமதி செய்யப்படவுள்ளன.

இவை அனைத்தும் 50 வீத மானிய விலையில் விவசாயிகளுக்கு வழங்கப்படவுள்ளன என்று யாழ்ப்பாண மாவட்ட விவசாயப் பணிப்பாளர் திருமதி சசிபிரபா கைலேஸ்வரன் தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவித்ததாவது:

இறக்குமதி செய்யப்படும் விதை உருளைக்கிழங்கில் சசிரக உருளைக்கிழங்கின் 50 கிலோ பொதி ஒன்றின் விலை 16 ஆயிரத்து 200 ரூபா, இதில் 8 ஆயிரத்து 100 ரூபாவைச் செலுத்தி விவசாயிகள் பெற்றுக் கொள்ளலாம். பிறாடா ரகத்தின் விலையும் 16 ஆயிரத்து 200 ரூபா. அதையும் அரைவாசி விலையைச் செலுத்தி விவசாயிகள் பெற்றுக்கொள்ளலாம். றெட்லைட் சோடா உருளைக்கிழங்கின் விலை 50 கிலோ பொதியின் விலை 15 ஆயிரத்து 100 ரூபா. 7 ஆயிரத்து 550 ரூபா செலுத்தி விவசாயிகள் அதைப் பெற்றுக்கொள்ளலாம். விதை உருளைக்கிழங்கு பிரதேச கமநல சேவை நிலையங்கள் ஊடாக விவசாயிகளுக்கு கொழும்பு விவசாய அமைச்சின் நேரடி கண்காணிப்பின் கீழ் வழங்கப்படும் என்றார்.

Related posts: