5 மாத காலப்பகுதிக்குள் 42141 பேருக்கு டெங்கு!
Wednesday, May 10th, 2017
நாடளாவிய ரீதியில் கடந்த 5 மாத காலப்பகுதிக்குள் 42141 பேர் டெங்கு நோயாளர்களாக இனங்காணப்பட்டுள்ளதுடன் இதுவரையில் இந்நோய்த்தாக்கத்துக்குள்ளாகி 90 பேர் இறந்துள்ளதாகவும் சுகாதார அமைச்சு அறிவித்துள்ளது.
அதிகளவான டெங்கு நோயாளர்கள் மேல் மாகாணத்திலேயே பதிவாகியுள்ளதாகவும் அமைச்சு வெளியிட்டுள்ள அறிக்கையில் சுட்டிக்காட்டியுள்ளது.இது தொடர்பில் சுகாதார அமைச்சு வெளியிட்டுள்ள அறிக்கையில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது,
நாட்டில் இவ்வருடத்தின் இதுவரையான காலப்பகுதிக்குள் 42141 பேர் டெங்கு நோயாளர்களாக கண்டறியப்பட்டுள்ளனர். குறித்த நோயினால் பாதிக்கப்பட்ட 90 பேர் இதுவரையில் இறந்துள்ளனர். அதனடிப்படையில் கொழும்பு மாவட்டத்தில் மாத்திரம் 9218 பேரும் கம்பஹா மாவட்டத்தில் 5485 பேரும் காலி மாவட்டத்தில் 1856 பேரும் டெங்கு நோயாளர்களாக இனங்காணப்பட்டுள்ளனர்.
மேலும் யாழ்ப்பாண மாவட்டத்தில் 2410 பேரும் திருக்கோணமலையில் 4095 பேரும் கண்டறியப்பட்டுள்ளனர். அத்துடன் களுத்துறையில் 2471 பேரும் குருணாகலையில் 1848 பேரும் டெங்கு நோயாளர்களாக இன ங்காணப்பட்டு சிகிச்சை பெற்றுள்ளனர்.
அத்துடன் மக்கள் தொடர்ந்தும் டெங்கு நோய் குறித்து விழிப்புணர்வுடன் செயற்படு மாறும் காய்ச்சல் காணப்பட்டால் உடனடி யாக வைத்திய ஆலோசனைகளை பெற்றுக் கொள்ளுமாறும் சுற்றுப்புறச்சூழலில் டெங்கு பரவும் காரணிகளை அகற்றி தூய் மையாக வைத்திருக்குமாறும் அறிவுறுத்தப் பட்டுள்ளது.
Related posts:
|
|