5 ஜீ விவகாரம்: யாழ் மாநகர சபை முற்றுகை!
Thursday, July 18th, 2019யாழ். மாநகரசபை முதல்வரால் வெளிப்படைத்தன்மையற்ற விதமாக நடைமுறைப்படுத்தப்படும் 5ஜி அலைவரிசை திட்டத்திற்கு எதிராக யாழில் போராட்டமொன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது.
யாழ். மாநகரசபையின் முதல்வர் அலுவலகத்திற்கு எதிரில் இன்று இந்த போராட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.
இந்த போராட்டத்தில் பல்வேறு மக்கள் சார்ந்த அமைப்புக்கள், பொதுமக்கள் கலந்துகொண்டன.
இதன்போது, ‘அறிவியல் எனக்கூறி ஆபத்தை விதைக்காதே’ போன்ற வாசகம் எழுதப்பட்ட பதாதைகளை ஏந்தியிருந்த போராட்டக்காரர்கள், 5ஜி அலைவரிசைக்கு கண்டனத்தையும் எதிர்ப்பையும் வெளியிட்டனர்.
யாழ்.மாநகர ஆணையாளரின் ஒப்புதலின்றி, 5ஜி அலைவரிசை கோபுரம் அமைப்பது தொடர்பாக மாநகர முதல்வர் தன்னிச்சையாக செயற்படுவதாக போராட்டக்காரர்கள் குற்றஞ்சாட்டினர்.
பொதுமக்களுக்கு 5ஜி அலைவரிசை தொடர்பான விழிப்புணர்வுகள் எதுவுமில்லை என்றும் யுத்தத்தினால் பாதிக்கப்பட்ட எமக்கு 5ஜி அலைவரிசை கோபுரம் தேவையில்லை என்றும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.
Related posts:
|
|