5 ஆயிரம் ரூபா கொடுப்பனவு: சமுர்த்தி அபிவிருத்தி உத்தியோகத்தர் ஊடாக பெற்றுக்கொள்ள முடியும்!

Thursday, April 15th, 2021

குறைந்த வருமானம் பெறும் குடும்பங்களுக்கு சித்திரை புத்தாண்டை முன்னிட்டு வழங்கப்படும் 5 ஆயிரம் ரூபா கொடுப்பனவு இதுவரை 18 இலட்சம் குடும்பங்களுக்கு வழங்கப்பட்டிருப்பதாக ராஜாங்க அமைச்சர் ஷெஹான் சேமசிங்க தெரிவித்துள்ளார்.

அத்துடன் இந்தக் கொடுப்பனவு இன்றையதினமும் வழங்கப்படும் எனவும் சமுர்த்தி பயனாளிகள், குறைந்த வருமானம் பெறுவோர், வயோதிபர்கள், ஊனமுற்ற மற்றும் சிறுநீரக நோயாளர்கள் ஆகியோரும் 100 வருடங்களை பூர்த்தியான வயோதிப பயனாளிகள் உள்ள குடும்பங்களுக்கும் இந்தக் கொடுப்பனவு வழங்கப்படுவதாக சமுர்த்தி பணிப்பாளர் நாயகம் பந்துல திலகசிறி தெரிவித்துள்ளார்.

இந்தக் கொடுப்பனவைப் பெற தகுதியுடையோர் இன்று அல்லது எதிர்வரும் தினமொன்றில் சமுர்த்தி அபிவிருத்தி உத்தியோகத்தர் ஊடாக  கொடுப்பனவைப் பெற்றுக்கொள்ள முடியும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts: