5 ஆம் தர புலமைப்பரிசில் பரீட்சை குறித்து அதிபர்களுக்கு சுற்று நிருபம்!

ஐந்தாம் தர புலமைப்பரிசில் பரீட்சைக்கு மாணவர்கள் வயது வேறுபாடு இன்றி அனைவரும் கட்டாயம் தோற்றவேண்டும் எனும் கல்வி அமைச்சின் சுற்றறிக்கை இரத்துச் செய்யப்படுவதாக கல்வி அமைச்சின் செயலாளர் எம்.என்.ரணசிங்க அறிவித்துள்ளார்.
மாணவர்கள் தமது விருப்பத்தின் பிரகாரம் மேற்படி பரீட்சைக்குத் தோற்ற முடியும் என்பதுடன், இப்பரீட்சைக்குத் தோற்றுமாறு மாணவர்கள் எவரும் அழுத்தங்களுக்கு உள்ளாகப்படக்கூடாது எனவும் இது தொடர்பாக பெற்றோர்களுக்கு அறிவுறுத்துமாறும் சகல பாடசாலை அதிபர்களும் கேட்கப்பட்டுள்ளனர்.
ஐந்தாம் தர புலமைப்பரிசில் பரீட்சைக்குத் தோற்றுமாறு மாணவர்களைத் தூண்டும் வகையில் சுவரொட்டிகள், பெனர்கள், போட்டி வகுப்புக்கள், கருத்தரங்குகள் என்பவற்றை நடத்துவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளதுடன், இது தொடர்பாக மாணவர்களிடமோ அவர்களுடைய பெற்றோர்டகளிடமோ எவ்வித கட்டணம் அறவிடுவதற்கும் தடை விதிக்கப்படுவதாக கல்வி அமைச்சு அறிவித்துள்ளது.
எதிர்காலத்தில் ஐந்தாம் ஆண்டுப் புலமைப்பரிசில் பரீட்சைக்குப் பதிலாக எட்டாம் தரத்தில் பரீட்சை நடத்தப்பட்டு மாணவர்கள் தரம் பிரிக்கப்படுவர் என ஜனாதிபதி மைத்திரி அறிவித்திருந்த நிலையில், கல்வி அமைச்சின இச்சுற்றறிக்கை வெளியாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
|
|