5 அத்தியாவசிய பொருட்களின் விலைகள் குறைப்பு – லங்கா சதொச நிறுவனம் அதிரடி அறிவிப்பு!
Wednesday, December 14th, 2022இன்று (14) முதல் அமுலுக்கு வரும் வகையில் லங்கா சதொச 5 அத்தியாவசிய பொருட்களின் விலைகளை குறைத்துள்ளது.
இதன்படி, சிவப்பு பருப்பு ஒரு கிலோகிராமின் விலை 4 ரூபாவினால் குறைக்கப்பட்டுள்ள நிலையில் அதன் புதிய விலை 385 ரூபாவாகும்.
கோதுமை மா ஒரு கிலோகிராம் ஒன்றின் விலை 15 ரூபாவினால் குறைக்கப்பட்டுள்ள நிலையில் அதன் புதிய விலை 250 ரூபாவாகும்.
இதேவேளை, ஒரு கிலோகிராம் வெள்ளைப்பூண்டின் விலை 35 ரூபாவினால் குறைக்கப்பட்டுள்ளதுடன், அதன் புதிய விலை 460 ரூபாவாகும்.
அவ்வாறே, ஒரு கிலோகிராம் வெங்காயத்தின் விலை 9 ரூபாவினால் குறைக்கப்பட்டுள்ளதுடன், அதன் புதிய விலை 190 ரூபாவாகும்.
அதேவேளை உள்ளூர் டின் மீன் ஒன்றின் விலை 5 ரூபாவினால் குறைக்கப்பட்டுள்ளதுடன், அதன் புதிய விலை 490 ரூபாவாகும் என லங்கா சதொச தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது
Related posts:
கீதாவின் பாராளுமன்ற இரத்து விவகாரம்: மேன்முறையீட்டு நீதிமன்ற தீர்ப்பை உயர்நீதிமன்றம் இடைநிறுத்தம் செ...
ஜனாதிபதி தேர்தல்: பாரிய நெருக்கடியை எதிர்நோக்கும் தேர்தல் ஆணைக்குழு!
இலங்கை அணி 1996 ஆம் ஆண்டு உலகக் கிண்ணத்தை வென்று இன்றுடன் 28 வருடங்கள் பூர்த்தி!
|
|